/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SAFFSF.jpg)
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் பயிற்சி வகுப்புக்கு செல்லும் அளவிற்கு பொருளாதார வசதிகள் மாணவர்களுக்கு இல்லை என்பதாலும் இந்த அவசர சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.பொருளாதார நிலை, வாழ்க்கை தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உள் ஒதுக்கீட்டை வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)