Advertisment

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம். மருத்துவர் கைது, வெளிநாடு தப்பிய மகன்.

சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித் சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலமாக வேலூர் மாணவனை தேர்வு எழுதி வைத்து அவர்தேனிமருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்ந்துள்ளார். இந்த புகார் வெளிவந்ததை அடுத்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஒரு வாரம் தலைமறைவுக்கு பின்னர் சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது. அதன் அடிப்படையில் பல இடங்களில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

neet issue

ஏற்கனவே மூன்று மாணவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். இதில் மாணவர் பிரவீன் மற்றும் அவரது தந்தை ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். மற்றோர் மாணவனான ராகுல் மற்றும் அவருடைய தந்தையை சிறையில் அடைப்பதற்கான வேலைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மற்றோர் மாணவியான அபிராமியை தற்போது விசாரணை வளையத்துக்குள் வைத்துள்ளார். அவர் தொடர்பான தகவல்களும், ஆவணங்களையும் தனிப்படை போலீசார் திரட்டி வருகின்றனர்.

Advertisment

பல இடங்களில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் முஹம்மத் ஷஃபி என்பவரை சிபிசிஐடி போலீசாரால் கைது செயப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரை சேர்ந்தவர் ராஜா. திருப்பத்தூர் , வாணியம்பாடி, அரூர் நகரங்களில் மருத்துவமனை நடத்தி வருபவர். இவரது மகன் மருத்துவர் முஹமத் ஷஃபி. இவர் வாணியம்பாடி காதர்பேட்டையில் உள்ள கிளினிக்கை பார்த்துக்கொள்கிறார்.

இவருக்கு தனது மகன் இர்ஃபான் னை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முஹம்மத் ஷஃபியை சிபிசிஐடி போலீசார் செப்டம்பர் 29 தேதி கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இவரது மகன் இர்ஃபான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவராக சேர்ந்துள்ளார். தான் மாட்டி கொள்வோம் என தெரிந்த மாணவன் இர்ஃபான் கல்லூரியில் விடுப்பு எடுத்துவிட்டு

கடந்த 8ம் தேதி மொரிஷியஸ் நாட்டுக்கு சென்றுவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கைது செயப்பட்டுள்ள டாக்டர் முஹம்மத் ஷஃபி உடன் பிறந்தவர்கள் அனைவரையும் மருத்துவராக உள்ளனர்.

இதனால் மகன் இர்ஃபானை முறைகேடாக மருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்த்துள்ளார். மருத்துவர் முஹம்மத் ஷஃபி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று சிபிசிஐடி போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

medical college neet student udit surya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe