நீட் தேர்வில ஆள்மாறாட்ட முறைகேடு நடந்திருக்கும் நிலையில் இதுதொடர்பான வழக்கில் அரசு அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த நீட் தேர்வுஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை எனசென்னை உயர்நீதிமன்றம்கருத்து தெரிவித்துள்ளது.
மேலும்,நீட் ஆள்மாற்றட்டத்தில் ஒரே ஒரு இடைத்தரகருக்கு மட்டும்தான் தொடர்பு உள்ளது என்பது நம்பும்படியாக இல்லை. இந்த ஆள்மாறாட்டத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர், எவ்வளவு பணம் கைமாறியது என தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம்நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக அக்.15 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் அறிக்கை அளிக்கவும்உத்தரவு பிறப்பித்துள்ளது.