நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இர்ஃபான் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Advertisment

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவரும்மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முஹம்மத் ஷஃபியை சிபிசிஐடி போலீசார் செப்டம்பர் 29 ஆம்தேதி கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Neet impersonation ... irfan removed from college

இர்ஃபான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவராக சேர்ந்துள்ளார். இந்நிலையில் மாணவன்இர்ஃபான் சேலம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவா முன்னிலையில் நேற்று ஆஜரானர். ஆஜரான மாணவன் இர்ஃபானை அக்டோபர் 9 ஆம் தேதிவரை சிறையிலடைக்க நீதிமன்றம்உத்தரவிட்டது.

Advertisment

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இ ர்ஃபான் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி இருந்து நீக்கப்பட்டுள்ளார். மருத்துவக் கல்லூரி இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.