Skip to main content

''தன்னம்பிக்கை அளிக்க நீட்...''-கலக்கும் 68 வயது இளைஞர்!

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

 "Neet to give hope..." - 68-year-old young man who is confused!

 

நீட் தேர்வு அச்சத்தில் நம்பிக்கை இழந்து பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் 68 வயதில் நீட் தேர்வு எழுதி அசத்தியிருக்கிறார் முன்னாள் அரசு அதிகாரி.

 

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், தஞ்சை,  கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மொத்தமாக எட்டு தேர்வு மையங்கள் நீட் தேர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். அதில் திருவாரூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ராமலிங்கம் (வயது 68) என்பவர் தஞ்சை வல்லத்தில் உள்ள பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நீட் தேர்வு எழுதினார். ஏற்கனவே அரசின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமலிங்கம் இது குறித்து கூறுகையில், ''மருத்துவராக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. நிச்சயமாக வெற்றி பெற்று மருத்துவராகி விடுவேன். நீட் தேர்வால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது. அவர்களுக்கு என்னைப் போன்றவர்கள் தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் நீட் தேர்வு எழுதினேன்'' என்று தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு; விண்ணப்ப பதிவிற்கான அறிவிப்பு வெளியீடு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Notification Release for Application Registration for NEET Exam

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டிய தேதியை தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (10-02-24) முதல் நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், www.nta.ac.in, exams.nta.ac.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.