Advertisment

நீட் விலக்கு மசோதா... அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு

Neet Exemption Bill ... All Party Meeting Announcement!

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

Advertisment

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக விரைவாகத் தீர்வுகாண வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அந்த மசோதாவும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். மசோதா திருப்பி அனுப்பப்படுவதற்கான காரணங்களைப் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக அரசுக்கு விளக்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் வரும் ஜனவரிஐந்தாம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், 'நாளை மறுநாள் காலை 11 மணிக்கு சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்.

Neet Exemption Bill ... All Party Meeting Announcement!

நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடிவு செய்யும் இந்த நீட் விலக்கு மசோதாவானது கிராமப்புற ஏழை மாணவர்களுடைய நலனுக்கு எதிராக இருப்பதாகவும், நீட் தேர்வை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், நீட்சமூகநீதியை பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்களின் கல்வி சுரண்டப்படுவதை தடுப்பதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநரின் இந்த கருத்து தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல. சட்டத்திற்கு அடிப்படையான கூறுகள் தவறானவை என ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்க கூடியது அல்ல. நீட் தேர்வுக்குஎதிராக தமிழகத்தில் அனைவரிடமும் கருத்தொற்றுமை நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். ஆளுநரின் கருத்துக்கள் ஆராயப்பட்டு நீட் தேர்வு பற்றிய உண்மைநிலை தெளிவாக விளக்கப்படும்' என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe