இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,842 தேர்வு மையங்களில் இன்று (13/09/2020) நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதவுள்ள நீட் தேர்வு பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரைநடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 14 நகரங்களில் நடைபெறும் நீட் தேர்வை 1,17,990 பேர் எழுத இருக்கின்றனர்இந்நிலையில் சென்னையில்ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில் நீட் தேர்வுக்கு மாணவிகள், மாணவர்கள் தயாராகி வந்தனர். அதேபோல் மயிலாப்பூர் பி.எஸ் சீனியர் பள்ளி, சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, கீழ்பாக்கம்,பர்னபி சாலையில் உள்ளகோல சரஸ்வதி வைணவ மேல்நிலைப் பள்ளியில்மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான குழுமினர்.