கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில பாடப்பிரிவை படிக்கும் மாணவர்களால் சிபிஎஸ்இயிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக வேலூரைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் நீட் போன்ற தேர்வு முறைகளை மாற்றி அமைப்பது நீதிமன்றங்களின் வேலையா? என கேள்வியும்எழுப்பியுள்ளது.