Advertisment

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை... அஞ்சலி செலுத்துவதற்காக சேலம் புறப்பட்ட உதயநிதி!

neet exam student incident dmk udhayanidhi stalin arrive salem district

தமிழ்நாட்டில் பல மாணவர்களின் உயிர்களைக் குடித்த தேர்வு நீட். எந்த மாணவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க. அரசு நாளை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ளது.

Advertisment

இந்தநிலையில் தான் சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரில் நீட் நுழைவுத் தேர்வு எழுதவிருந்த மாணவர் தனுஷ் (வயது 19)இன்று (12/09/2021) காலை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Advertisment

இது குறித்த தகவல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த தி.மு.க.வின் இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிய வர, அவர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தற்போது மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சேலம் மாவட்டத்திற்கு புறப்பட்டுள்ளார். மேட்டூர் அருகே உள்ள கூழையூருக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலின், மாணவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். மேலும், மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார். உதயநிதியுடன் தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாணவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளதாக தகவல் கூறுகின்றன.

neet exams Salem students udhayanidhistalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe