பள்ளிகளில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்புவகுப்புகள் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தனியார்மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தலாம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கம்பத்தை சேர்ந்த விஜயகுமார் தொடர்ந்த வழக்கினை முடித்து வைத்து நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மே 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கடந்த 14 ஆம் தேதியேதேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.www.ntaneet.ac.inஎன்ற இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வுக்கு செல்லும் முன் ஹால் டிக்கெட்டை கண்டிப்பாக பிரிண்ட் அவுட் எடுத்து செல்ல வேண்டும் என அறிவித்துள்ள தேசிய தேர்வு முகமை மே 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் 5 மணி வரை மூன்று மணிநேர தேர்வாகநீட் தேர்வு நடைபெறவிருக்கிறது எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.