NEET exam revaluation case highcourt orders National Examination Agency to respond

நீட் தேர்வு விடைத்தாள் மறு மதிப்பீடு தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மனுவிற்குப் பதிலளிக்க,தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

வேலூர் மாவட்டம், அணைக்கட்டைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் நான் கலந்துகொண்டேன். இந்தத் தேர்வில், மாதிரி விடைத்தாளில் 720 மதிபெண்களுக்கு 520 மதிப்பெண்கள்பெற்றிருந்தேன்.ஆனால்,நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு,நான் 19 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருப்பதாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

Advertisment

இந்த முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.இந்நிலையில், என்னுடைய விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யக்கோரி தேசிய தேர்வு முகமைக்கு மனு அளித்தேன். ஆனால்,எனது மனு தொடர்பாக தேசிய தேர்வு முகமை எந்த முடிவுகளும் அறிவிக்கவில்லை. எனவே,எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், விடைத்தாளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்’என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது,மனு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு,வழக்கின் விசாரணை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.