Advertisment

நீட் தேர்வு முடிவை வெளியிடத் தடைகோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு!

neet exam results madurai high court bench

Advertisment

நீட் மருத்துவத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடைகோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மருத்துவர் ராமகிருஷ்ணன் என்பவர் முறையீடு செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தர ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு அவசர வழக்காக இன்று (13/10/2020) விசாரிக்க உள்ளது.

Advertisment

வரும் அக்டோபர் 16- ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடைகேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

madurai high court neet exam results
இதையும் படியுங்கள்
Subscribe