neet exam result 2020

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜக்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சபரிமாலா. திண்டிவனம் அருகில் உள்ள வைரபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வந்தார். நீட் தேர்வால் டாக்டராக முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட குழுமூர் அனிதாவின் நிலையைக் கண்டு கொதித்து எழுந்த ஆசிரியை சபரிமாலா தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்தார்.

Advertisment

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார்.பெண்கள் விடுதலை இயக்கத்தை துவக்கி நடத்தி வருகிறார். பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடி வருகிறார். அதேபோன்று வரலாற்று சிறப்புமிக்க பழைமையான நிகழ்வுகளை கல்வெட்டுகளை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி அதை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Advertisment

அப்படிப்பட்ட ஆசிரியர் சபரிமாலாவின் மாணவன் ஜீவித் குமார் அதிக மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். இந்த மாணவர் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார் ஆசிரியை சபரிமாலா.நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்என்பதற்காக நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர் ஜீவிதனை அடையாளம் கண்டு மருத்துவத்தின்மீது உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்டுபல இடங்களில்உதவிகளைப் பெற்று அதன் மூலம் கடந்த ஒரு ஆண்டாக நாமக்கல்லில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படிப்பதற்கு உதவி செய்துள்ளார். தற்போதைய நீட்தேர்வு வில் மாணவன் ஜீவிதன் 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் ஜீவிதன் முதலிடம் பெற்றுள்ளார்.தனது டாக்டர் படிக்கும் கனவை ஆசிரியை சபரிமாலா நிறைவேற்றி உள்ளதாக அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார் மாணவர் ஜீவிதன்.