Advertisment

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சல்; பெரம்பலூர் மாணவி தற்கொலை

மருத்துவ கல்விக்கான நேர்க்காணல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இறுதி வரை காத்திருந்தும் மருத்துவ கல்விக்கு இடம் கிடைக்காத விரக்தியில் பெரம்பலூரில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

n

பெரம்பலூர் தீரன் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக நடந்துனர் (TNSTC) செல்வராஜ், இவரது மகள் கீர்த்தனா (19). இவர் கடந்த 2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் +2 பொதுத் தேர்வில் 1054 மதிப்பெண் பெற்று மருத்துவ கல்விக்காக நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றார்.

மருத்துவராவதே தனது லட்சியமாக கொண்ட மாணவி கீர்த்தனா, அதற்காக சென்னையில் நீட் பயிற்சி மையம் ஒன்றில் தொடர் பயிற்சி பெற்று இந்தாண்டு நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவ கல்விக்கான நேர்க்காணல் நேற்றுடன் நிறைவுற்ற நிலையில் இறுதி வரை காத்திருந்தும் மருத்துவ கல்விக்கு இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி கீர்த்தனா இன்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

n

+2 பொதுத் தேர்வில் தன்னை விட குறைந்த மதிப்பெண் பெற்ற சக மாணவிக்கு நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்வி கிடைத்துள்ள நிலையில் சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டு பயின்று இரண்டு முறை நீட் தேர்வு எழுதி போராடியும் தனக்கு மருத்துவ கல்வி கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் கீர்த்தனா இந்த முடிவுக்கு சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe