/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/durga (1).jpg)
மதுரை மாவட்டம், ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வரும் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரின் 19 வயது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா. இவர் 12- ஆம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்குக்காக தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்த மாணவி, இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
நாளை (13/09/2020) நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா படித்து வந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தத்தனேரி மயானத்தில் மாணவி உடலுக்கு இறுதிசடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)