நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக மனுத்தாக்கல் ஒன்றைச் செய்துள்ளது. தமிழகத்தில் நீட் விலக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு சார்பாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் ஒன்றைச் செய்துள்ளது. அதில் நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது. கூட்டாட்சி கொள்கையையே இது மீறுவதாக உள்ளது. நீட் தொடர்பான உச்சநீதிமன்றத்தீர்ப்பு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என அறிவிக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு
Advertisment