Skip to main content

நீட் தேர்வு; மாணவிக்கு நேர்ந்த அவலம்!

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

 neet exam invigilator asked student to remove her bra during the examination
கோப்புப்படம்

 

தேசிய தேர்வு முகமை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தும் நீட் நுழைவு தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்ற இந்த நீட் தேர்வு எழுதுவதற்கு கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 

தேர்வு நுழைவுச்சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை தேர்வர்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் டிரான்ஸ்பரன்ட் வாட்டர் பாட்டில் மட்டும் எடுத்து வர அனுமதி உண்டு. மற்றபடி மின்னணு சாதனங்கள், கொலுசு, செயின், பெல்ட் உள்ளிட்ட எதுவும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மேலும், சாதாரண செருப்பு, தலையில் சாதாரண க்ளிப் உள்ளிட்டவை மட்டுமே அணிந்திருக்க வேண்டும் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.  

 

கடந்த சில வருடங்களாகவே நீட் தேர்வு எழுதும் முன்னர் சோதனை என்ற பெயரில் தேர்வு அலுவலர்கள் மாணவர்களை அத்துமீறி நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. தேர்வு எழுதும் போது மாணவிகளுக்கு திருமணம் நடந்திருந்தாலும் கூட தேர்வு எழுதும் மையத்திற்குள் செல்லும் போது தாலியை கழட்டிவிடச் சொல்லிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. 

 

இந்த நிலையில், நேற்று நீட் தேர்வு எழுத வந்த மாணவியை உள்ளாடையை அகற்றச் சொல்லியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் சோதனையின் போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொல்லியுள்ளனர். மாணவியின் உள்ளாடையின் மீது சந்தேகம் எழுந்ததால் கண்காணிப்பு அலுவலர்கள் அகற்ற அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அந்த மாணவியும் தனது உள்ளாடையை அகற்றிய பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.