neet exam govt school students exam centre school arranged the transport facilities

Advertisment

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று (12/09/2021) பிற்பகல் 02.00 நடைபெறுகிறது. சில தேர்வு மையங்கள் தொலைத் தூரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக மாணவிகளை நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற வைத்து மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிய கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த வருடம் அதிகமான மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

நீட் தேர்வு எழுத மாணவிகள் திருச்சியில் பல்வேறு பகுதிக்கும் செல்ல வேண்டி உள்ள நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக வேன்கள் ஏற்பாடு செய்து ஆசிரியர்கள், பெற்றோர்களின் பாதுகாப்போடு 55 மாணவிகள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

neet exam govt school students exam centre school arranged the transport facilities

Advertisment

இது குறித்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் கூறுகையில், "கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் எங்கள் பள்ளியில் பயின்ற 11 மாணவிகள் தேர்ச்சிப் பெற்றனர். இதில் 4 மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்து வருகிறார்கள். அதேபோல், இந்த வருடமும் 55 மாணவிகள் நீட் தேர்வு எழுதச் செல்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் வாகன ஏற்பாடு செய்து ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் உடன் அனுப்பி இருக்கிறோம். கடந்த ஆண்டு மாணவிகள் 11 பேரும் தேர்வு எழுதவிருக்கிறார்கள். அதனால் இந்த வருடமும் எங்கள் பள்ளி மாணவிகள் மருத்துவம் படிக்க செல்வார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.