ADVERTISEMENT

நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்!

11:12 AM Sep 13, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13/09/2021) தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தொடக்கம் முதலே நீட் நுழைவுத் தேர்வை திமுக எதிர்த்துவருகிறது. திமுக பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி தர வேண்டும். மருத்துவப் படிப்பிற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான முயற்சியை எடுத்துவருகிறோம். நீட்டில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இதனிடையே, நீட் நுழைவுத் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT