நீட்டுக்கு மேலும் ஒரு உயிர்பலி... தர்மபுரி மாணவர் தற்கொலை!! 

NEET EXAM

மதுரை தல்லாகுளத்தில்ஜோதி துர்காஎன்ற மாணவி கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் எடுத்த நிலையில், நாளை நடைபெறும் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில்மாணவி ஜோதி துர்காதற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முன்பாகவே அரியலூரில் நீட்டுக்குதயாராகி வந்தவிக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் தர்மபுரியில் மேலும் ஒரு மாணவர் நீட் தேர்வு பயத்தில்தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளைநீட் தேர்வு எழுதஇருந்ததர்மபுரியைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா என்பவர் வீட்டில்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dharmapuri neet Suicide
இதையும் படியுங்கள்
Subscribe