கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் சேர்ந்த சென்னை மாணவன் உதித்சூர்யா மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மருத்துவக் கல்லூரி பேராசிரியர் குழுவினர் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.