neet committed student chennai high court

Advertisment

நீட் தாக்கம் பற்றி ஆய்வு செய்யும் குழுவுக்கு எதிரான பா.ஜ.க.வின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி மாணவி நந்தினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "மாணவிகளுக்கு ஏற்பட்டப் பாதிப்பைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு குழு அமைத்துள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட பா.ஜ.க. வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்குடன் வரும் ஜூலை 5- ஆம் தேதி அன்று மாணவி வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.