Advertisment

"கருத்துகளை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கப்படும்"- ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி!

NEET COMMITTEE FORMER JUSTICE PRESSMEET

Advertisment

நீட் பாதிப்பு குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், நீட் தாக்கம் குறித்து ஆராய அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர்இன்று (28/06/2021) மாலை 04.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் மீண்டும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், "நீட் தேர்வு தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் நிறைய கருத்துகள் வந்துள்ளன. அனைத்து கருத்துகளையும் ஆராய்ந்தப் பிறகே அறிக்கை தயார் செய்யப்படும். நான்காம் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒரு மாதத்துக்குள் ஆய்வை முடிக்க முயற்சிக்கிறோம். ஆய்வு முடியாவிட்டால் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.

நீட் பாதிப்பு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

neet tn govt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe