
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவை சிதைக்கக் கூடிய நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் வடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் க.ழகம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.மகளிரணிச் செயலாளர் ராமபிரபா, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், நகர தலைவர் ராவணன், நகரச் செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் கோ. இந்திரஜித், கலைச்செல்வி, அறிவுச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது சமூக இடைவெளியுடன், பதாகைகள் ஏந்தி நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், கரோனா ஊரடங்கு காலத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது எனக் கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)