neet ban demonstration

நீட் தேர்வால் ஏற்படும் தொடர் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்,சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வு முறையை ரத்து செய்யக்கோரியும்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்.கே நகர் பகுதி குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்தப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதித் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதி பொருளாளர் ராஜா, நிர்வாகிகள் சூர்யா, வேலு, ஷாஜகான், கோகுல், பிரியன்,பாஷா, மாதர் சங்கத் செயலாளர் விமலா ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment