Advertisment

சட்டமன்றத்தில் நீட்... திமுகவின் கவன ஈர்ப்பும்... முதல்வரின் கேள்வியும்...

Neet in the assembly ... DMK's attention ... Chief's question

கரோனா தொற்று காரணமாக போதிய இடவசதிகள் இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டமன்றகூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுநேற்று சட்டசபை கூடியது.

Advertisment

இன்று இரண்டாம் நாளாகசட்டசபை கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாகதிமுகதலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

Advertisment

இந்நிலையில்2010-ல் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது.நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தபோது திமுக கூட்டணியில் இருந்ததா,இல்லையா? என ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அதனையடுத்து நீட் தேர்வுக்குஆதரவான வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி ஆஜராகியதாககூறியஅதிமுக உறுப்பினர்இன்பதுரைபேச்சை நீக்கக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்துகாங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் சட்ட சபை உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

admk edappadi pazhaniswamy neet exam stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe