Advertisment

அனிதா நினைவு தினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரி பேரணி

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா நினைவு தினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரியும் பெண்கல்வியை பாதுகாக்கவும் பெண்கள் மீதான வன்கொடுமையை தடுக்க வழியுறுத்தியும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பேரணி நேற்று எழும்பூரில் நடைபெற்றது.

Advertisment

a

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும் தமக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்ற காரணதால் அவர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு வருடத்தில் மட்டும் ராஜலட்சுமி,வைசியா,மோனிஷா, பிரிதிபா, சந்தியா என மொத்தமாக 11 மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் என உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து நீட் எனும் உயிர்கொள்ளியை தூக்கி எரியந்த பாடுமில்லை , செப்டம்பர் 1 தேதி தங்கை அனிதா நினைவு நாள் என்பதால் இந்தி மாணவர்கள் சங்கம் 01.09.19 தேதி அன்று சென்னை எழும்பூரில் அனிதா உருவ முகமூடியை அணிந்தபடி பேரணியை நடத்தினர்.

Advertisment

a

இந்த பேரணியில் அவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதா நினைவு தினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும். பெண்கல்வியை பாதுகாக்கவும் பெண்கள் மீதான வன்கொடுமையும் தடக்கவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோசத்துடன் பேரணியை நடத்தினர்.

இதன் தொடர்பாக பேசிய இந்திய மாணவர்கள் சங்கம் மாரியப்பன், நீட் தேர்வு மூலமாக மத்திய மாநிலஅரசு செய்த மிக பெரிய துரோகம். தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டாள் என்பது முற்றிலும் தவறு . அது தற்கொலை அல்ல கொலை. மொத்தம் இந்த இரண்டு வருடத்தில் மட்டும் 11 பேர் இறந்துள்ளனர். அதில் நான்கு பேர் கடிதம் எழுதிவைத்து விட்டுத்தான் இறந்துள்ளனர்.

இந்த அரசு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் அனுப்பி வைத்துள்ளதாக கூறிய இந்த அரசு அதை ரத்து செய்தது கூட சொல்ல மறுந்ததின் விளைவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு இன்மை என இந்த சூழ்நிலையில் தான் அனிதா நினைவு தினத்தன்று நாங்கள் போராட்டத்தை மேற்கொண்டோம். அதில் அனிதா நினைவு நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நீட் சரி என்று வரிந்து கட்டிக்கொண்டு பேசிய தமிழிசைக்கு ஆளுநர் பதவி அதுவும் அனிதா நினைவு நாள் அன்று கொடுத்துள்ளது என்பது வன்மமான செயல் என்றார்.

neet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe