Advertisment

நீலம் புத்தக விற்பனை நிலையம்; கமல்ஹாசன் திறந்து வைத்தார்

சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலை, மிடில்டன் வீதியில் அமைந்துள்ள திரு காம்ப்ளக்ஸின் முதல் தளத்தில்உள்ள நீலம் புத்தக விற்பனை நிலையத்தை கமலஹாசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்துபுத்தகங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இயக்குநர் பா.ரஞ்சித் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 35 ஆண்டுகளுக்கு முன் ‘மய்யம்’ என்ற பத்திரிகை தொடங்கியதை சுட்டிக்காட்டி, “எனது முக்கியமான எதிரி;அரசியல் எதிரி சாதிதான். சக்கரத்திற்கு பிறகான மனிதனின் கண்டுபிடிப்புகளில் மாபெரும் சிருஷ்டி கடவுள். நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது ஏற்க முடியாது. அதில் கொடூரமான ஆயுதம் சாதி. எழுத்துகள் வேறுபடலாம். ஆனால் மய்யமும் நீலமும் ஒன்று” எனக் கூறினார்.

Advertisment

kamalhaasan pa.ranjith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe