g

கஜாவின் தாக்கம் டெல்டாவை புரட்டிப் போட்டது. பனை தவிர அத்தனை மரங்களையும் சாய்த்துப் போட்டது புயல். மரம் வளர்ப்போம் மழை பெருவோம் என்று தொடங்கி மரக்கன்றுகளையும் விதைப் பந்து, விதைப் பென்சில்களையும் மாணவர்கள் மத்தியில் வழங்கி வந்த கிரீன் நீடா வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்டு வந்தனர்.

Advertisment

பல நூறு வருட பழமையான மரங்கள் சாய்ந்து போனாலும் சிலமாதங்களாக நட்டு வந்த பல ஆயிரம் மரக்கன்றுகள் தலைநிமிர்ந்து தலையசைத்து நிற்கிறதைப் பார்த கிரீன் நீடாவுக்கு ஒரு சந்தோசம். இழந்த மரங்களை நடுவோம் இயற்கையை மீட்போம். சுகாதாரம் காப்போம் மழைத்துளிகளை மண்ணுக்கு இழுப்போம் என்ற பறந்து விரிந்த மனதோடு மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

g

Advertisment

மரக்கன்றுகளை குழந்தைகளிடம் கொடுத்தால் வளர்த்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்க தொடங்கியுள்ளனர்.

இதன் தொடக்கமாக மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நீடாமங்கலம் கிரீன் நீடா அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் விழா நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியில் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வரவேற்றார்.

மூத்த செய்தியாளர் கி.சேதுரத்தினம், ஏ.ஐ.டி.யூ.சி மாநில இணை செயலாளர் ஜெ.குணசேகரன், வர்த்தக சங்கதலைவர் பி.ஜி.ஆர்.ராஜாராமன், சமூக ஆர்வலர்கள் ப.பத்மநாபன், கே.ஆர்.கே.ஜானகிராமன், சீனு.ராஜா, பாபு, வெங்கட்,

பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செயலாளர் ஜெகதீஸ்பாபு, தலைவர் நேரு ஆகியோர் மாணவர்களுக்கு பழமரக்கன்றுகளை வழங்கினர்.

ஆசிரியர்கள் சா.திராவிடமணி, கோ.உதயகுமார், காளியப்பன், சிங்கார கஸ்தூரி பாய், கலைவாணி, கல்பனா கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும் புங்கன் மரக்கன்றுகள் நடப்பட்டது.

g

கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறும்போது.., கஜா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கோடிக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து அழிந்து உள்ளது. இதனால் வரும் கோடை காலத்தில் பொது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் வெப்ப நோய் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெப்ப நோய் தாக்கத்திலிருந்து மக்களை காக்க இலட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி நட செய்கிறோம். சிறப்பாகவும் செழிப்பாகவும் வளர்க்கும் மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்குகிறோம். இது மாணவர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றார். மேலும் இந்த ஆண்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே எங்கள் லட்சியம். அந்த லட்சியத்தை நிறைவேற்ற இளைஞர்களும் மாணவர்களும் துடிப்போடு களம் இறங்கியுள்ளனர். மாணவர்களிடம் வழங்கும் கன்றுகளை அக்கரையோடு வளர்ப்பார்கள் என்பதால் தான் மாணவர்களுக்கு வழங்குகிறோம் என்றார்.

மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களோ.. கஜா புயலால் எங்கள் வீடுகளில் நின்ற மரங்கள் சாய்ந்தது. அதனால் மறுபடியும் பசுமை காக்க மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம் என்றனர்.

முடிவில் தலைமை ஆசிரியை க.தேவிலெட்சுமி நன்றி கூறினார்.