காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் இந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் அது உண்மையாகும் படிகாஞ்சனாவின் இந்தி மேக்கிங் தொடங்கி நடைபெற்றது.ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அந்த படத்திலிருந்து தற்போதுவெளியேறிவிட்டதாக ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்ஷய் குமார் நடிக்க இந்தியில் ''லட்சுமி பாம்'' என்ற பெயரில்வெளிவர இருந்ததுஇந்த திரைப்படம்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட அண்மையில்வெளியாகியது.அதில் அக்ஷய் குமார் கண்ணுக்கு கீழே காஜல் இடுகிறார். அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி படம் வெளியிட இருப்பதாகவும் ஏற்கனவேஅறிவிக்கப்பபட்டிருந்தது.இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இந்த படத்தை கைவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்
இந்த உலகில், பணத்தையும் புகழையும் விட, சுய மரியாதை ஒரு நபரின் தன்மைக்கு மிக முக்கியமான பண்பு ஆகும். அதனால் நான் திட்டத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.