Need security - Petition to Tamil Nadu DGP!

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் தரப்பின் இரண்டாவது நாள் வாதம் நேற்று நடைபெற்றது.இதில் ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் தங்களது தரப்பு வாதங்களை இவ்வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள புதிய நீதிபதியான ஜி.ஜெயச்சந்திரன் வைத்துள்ளனர்.

Advertisment

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வரும் ஆகஸ்ட் 15 தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வேண்டும் எனக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் மணிகண்டன் மனு அளித்துள்ளார். தமிழக டிஜிபி அலுவலகத்தில் இணையவழியாக இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.