சிலை வைக்க அனுமதி வேண்டும் - வி.சி.க கோரிக்கை!

Need permission to place the statue - VCK request

ஈரோடு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் தலைமையில் அதன் நிர்வாகிகள் இன்று ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,மாவட்ட எஸ்.பி. தங்கதுரையிடம் மனுகொடுத்தனர். அதன்பிறகு, ம.செ., பாஸ்கர்கூறும்போது, "ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மறைந்த தலைவர்களின் முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதைப்போன்று ஏழை மக்களுக்காகவும் பெண்கள் உரிமைக்காகவும் அனைத்துச் சமூக மக்களின் உரிமைக்காகவும் பாடுபட்ட சட்டமேதை அம்பேத்கரின் சிலையையும் வைக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இன்றுவரை சிலைவைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவேதான்,அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என எஸ்.பி.யிடம் மனு கொடுத்தோம்" என்றனர்.

Anna kalaingar periyar vck
இதையும் படியுங்கள்
Subscribe