Have an online exam .. Students in the demonstration!

Advertisment

கரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. வகுப்புகளும் தேர்வுகளும் இணையதளம் மூலம் நடந்தன.இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்துவருகின்றன.அதேபோல் தேர்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.அந்தவகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதில் அவர்கள், “பல மாதங்கள் வகுப்புகளை ஆன்லைனில் நடத்திவிட்டு தற்போது தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அறிவித்திருப்பதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். எனவே, தமிழக அரசு கல்லூரி தேர்வுகளை (இந்த செமஸ்டரை) ஆன்லைனில் வைக்க வேண்டும்”என கோரிக்கை வைத்துவருகின்றனர்.