broker mobs

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் சென்னையில் புரோக்கர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.பணக்காரர்களையும் வசதியுள்ள நபர்களையும் இந்த புரோக்கர்கள் முதல் கட்டமாக 50 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். உங்களுக்கு நாற்பது கோடி அளவிற்கு பற்றுவரவு வங்கியில் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும்40 கோடி ரூபாயை நீங்கள் திரட்டக் கூடிய வகையில் இருப்பவராக இருக்க வேண்டும்.

இப்படிஇருப்பீர்கள் என்றால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஜெயிக்க வாய்ப்புள்ள தொகுதியை நாங்கள் உங்களுக்கு வாங்கி தருகிறோம் என ஒரு கும்பல் தொழிலதிபர்களிடம் பேரம் பேச கிளம்பியுள்ளது. அரிசி புல்லிங் எனச் சொல்லி ஏமாற்றியதைப் போல எம்பி பதவியை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என ஏமாற்றும் இந்த கும்பல் அதிமுக, திமுக என இரண்டு தலைமைகளிடமும் மிக நெருக்கமாக இருக்கிறது.

Advertisment

தங்களை அணுகும் பணக்காரர்களிடம், பாருங்கள் நான் அவரிடம் பேசுகிறேன், இவரிடம் பேசுகிறேன் என போன் போட்டு பந்தா காட்டுவது இவர்களின்கூடுதல் ஸ்டைல். இதனை நம்பி பல லட்சங்களை பறிகொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சில தொழிலதிபர்கள்.