Skip to main content

30 ஆயிரம் லோன் வேணுமா...? லோன் ஆப்பை நம்பிய தூய்மைப்பணியாளர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 Need a loan of 30 thousand ...? Tragedy for the cleaning lady who relied on the loan app!

 

சென்னை அம்பத்தூரில் தூய்மை பணியாளர் பெண்ணுக்கு கடன் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சென்னை அம்பத்தூர் மதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் கணவரை இழந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடன் பெறும் முனைப்பில் இருந்த அந்த பெண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர்,  'இன்ஸ்டன்ட் லோன் ஆப்' மூலம் கடன் வேண்டுமா என கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என தெரிவித்த நிலையில், கடன் தருவதாக ஒப்புக்கொண்ட அந்த நபர், புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனை நம்பி புகைப்படம் மற்றும் அவர் கேட்ட ஆவணங்களை அப்பெண்ணும் அந்த நபருக்கு  அனுப்பி வைத்துள்ளார்.

 

அதன்பிறகு அப்பெண்ணைத் தொடர்பு கொண்ட அதே மர்ம நபர், 30 ஆயிரம் ரூபாய் கடன் ரெடியாகி விட்டது. ஆனால் அதற்கு 3,000 ரூபாய் முன்பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரது புகைப்படத்தினை தவறாகச் சித்தரித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார் அந்த மர்ம நபர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இறைச்சிக் கடையில் கடன் தர மறுத்த உரிமையாளருக்கு  அரிவாள் வெட்டு!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
beaten on butcher shop owner who refused to give loan

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள லக்கி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காதர். இவரது மனைவி ஷகீரா. இருவரும் சேர்ந்து அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். அந்த இறைச்சி கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் இறைச்சியைக் கடனாக கேட்டதாக கூறப்படுகிறது. இறைச்சியைக் கடனாக கொடுக்க முடியாது எனக் காதர் கூறியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த ராஜா, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காதர் மற்றும் அவரது மனைவி ஷகீராவை வெட்டியுள்ளார்.

beaten on butcher shop owner who refused to give loan

இந்தத் தாக்குதலில் படு காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு புதுபட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர்களை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து இறைச்சிக் கடைக்கார தம்பதியினரை வெட்டிய ராஜா என்பவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறைச்சி கடனாக தர மறுத்ததால் இறைச்சிக்கடை தம்பதியினரை அறிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

“‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குங்கள்” - பிரதமர் மோடி

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
PM Modi request to remove 'Modi family' from social media

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைத்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் ‘மோடியின் குடும்பம்’ என்று வைத்திருப்பவர்கள் அதனை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பீகாரின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று விமர்சித்திருந்தார். அதற்கு, இந்தியாவே எனது குடும்பம் என்று பிரதமர் மோடி பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் சமூக வலைதளங்களில் அவர்களது பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’(மோடி கா பரிவார்) என்று மாற்றம் செய்துகொண்டனர். இந்த நிலையில்தான் பிரதமர் மோடி, ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் அனைவரும் என் மீதான பாசத்தின் காரணமாக சமூக வலைதள கணக்குக்குகளுக்கு பின் ‘மோடியின் குடும்பம்’ என்று  சேர்ந்தனர். அதிலிருந்து நான் நிறைய பலன் பெற்றேன். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை மக்கள் நமக்கு வழங்கியுள்ளனர். நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்ற செய்தி திறம்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது, ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெயர்கள் மாறலாம்; ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நாம் எப்போதும் ஒரே குடும்பம் என்ற வலிமையான உறவு அப்படியே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.