நீட் தேர்வு ஆள்மாறாட்டம் புகாரில் மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது. திருப்பதி மலை அடிவாரத்தில் வைத்து கைது செய்த சிபிசிஐடி. மாணவர் உதித் சூர்யா முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

Advertisment

 Need impersonation - Udit Surya's family arrested CBCID POLICE

இந்த வழக்கை நேற்று (24/09/2019) விசாரித்த நீதிபதி சிபிசிஐடி போலீசார் முன் மாணவர் நேரில் ஆஜரானால் முன் ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக ஏற்று விசாரிக்கப்படும் என்று நீதிபதி மாணவருக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் உதித் சூர்யாவை குடும்பத்துடன் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களை தேனி அழைத்து வந்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.