நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் இரண்டு பேர் தமிழக மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார்.

கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர், ஒரு மாணவி மீது சந்தேகம் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தேர்வு அனுமதிச்சீட்டு புகைப்படத்திற்கும், தற்போது உள்ள புகைப்படத்திற்கும் முரண்பாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சீட் பெற்ற உதித் சூர்யா பிடிப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Need Exam- Two More Medical Students Impersonating

Advertisment

Advertisment

இதற்கு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, விளக்கமளித்துள்ளார். அதில் சான்றிதழில் மாணவர்கள் பழைய புகைப்படங்கள் ஒட்டியிருப்பார்கள் என்பதால், சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க கல்லூரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.