Skip to main content

நெடுவாசல், வடகாடு கிராம மக்கள் மே தின தீர்மானம்!

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
neduvasal

  

நெடுவாசல், வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மே தின கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாளில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல், வடகாடு, கருகாக்குறிச்சி, சேந்தன்குடி மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 'நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் செயல்படுத்தக் கூடாது. அந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காக்குறிச்சி, வானக்கண்காடு, கோட்டைக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. எண்ணை ஆழ்குழாய் கிணறுகளை அப்புறப்படுத்த வேண்டும்' என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த நிலையில் மே முதல் நாளில் செவ்வாய் கிழமை நெடுவாசல், வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் கிராமசபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட்டு ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகள் அகற்றப்பட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்மாதிரி கிராம விருதுகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Chief Minister M.K.Stalin presented the exemplary village awards

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2021 - 22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், “முன்மாதிரி கிராம விருது" தோற்றுவிக்கப்பட்டு, மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில், 37 கிராம ஊராட்சிகளுக்கு ''முன்மாதிரி கிராம விருது” வழங்கி கௌரவிக்கப்படுவதுடன், இவ்விருதிற்கான கேடயமும், தலா 7.5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்றும், மாவட்ட அளவிலான விருதுகளுடன், சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் “முன்மாதிரி கிராம விருது' வழங்கி அதற்கான கேடயமும், தலா 15 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

அந்த அறிவிப்பின்படி 2021 - 22ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளூர் கிராம ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நி.பஞ்சம்பட்டி கிராம ஊராட்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நட்டாத்தி கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

2022 - 23 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கன்பாளையம் கிராம ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மருவத்தூர் கிராம ஊராட்சி மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரியனேந்தல் கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாநில அளவிலான முன்மாதிரி கிராம விருதுகளும், பரிசுத் தொகையாக தலா 15 இலட்சம் ரூபாய் மற்றும் கேடயமும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் திரு. பா. பொன்னையா, கூடுதல் இயக்குநர் எம்.எஸ். பிரசாந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

மணல் கொள்ளையர்களால் உருவான குட்டை... நீரில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு!

Published on 19/07/2020 | Edited on 20/07/2020

 

thiruchy


திருச்சி மாவட்டம் சிறுகனூர் முகமதியர் தெருவைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவருடைய குழந்தைகள் அஜிரா பானு வயது 11, முகமது அசீர் வயது 8, இவர்கள் இருவரும் பாடாலூர் பள்ளியில் 5 ஆம் வகுப்பு, 3 ஆம் வகுப்பு படிக்கிறார்கள். அதே  தெருவில் வசிக்கும் ஆதம்சாவின் மகள் ரிஸ்வான வயது 10, இவர் இருங்களுரில் உள்ள பள்ளியில் படிக்கிறார்.

கடந்த சில நாட்களாக திருச்சியில் பெய்த மழையில் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் உள்ள காட்டாற்றில் தண்ணீர் தேங்கி நின்றது. இதில் இந்த 3 குழந்தைகளும் அந்தக் காட்டாற்றில் விளையாடி இருக்கிறார்கள். குளிப்பதற்காக உள்ளே இறங்கியபோது ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கியிருக்கிறார்கள். 3 குழந்தைகளில் அபாயக் குரலை கேட்டுக் காப்பற்ற செல்வதற்குள் 3 குழந்தைகளும் முழ்கி இறந்து போனார்கள்.

இந்தக் காட்டாற்றில் அனுமதி இன்றி பொக்லைன் இயந்திரம் மூலம் கள்ளத்தனமாக மணல் அள்ளி கூடுதல் விலைக்கு விற்று இருக்கிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் மக்கள், இதனால்தான் இந்தப் பள்ளத்தில் 3 குழந்தைகள் விழுந்து நீரில் முழ்கி இறந்து போனார்கள் என்கின்றனர். 
 

சமீபத்தில் தான் திருட்டு மணல் அள்ளுவதற்கு உதவுவதாக சிறுகனூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனின் மீது கொடுக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.