Skip to main content

நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தில் மத்திய அரசம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

Published on 10/05/2018 | Edited on 11/05/2018
neduvasal

 

 

  
 நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அந்த நிறுவனம் சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல மத்திய மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின்படி கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் 16 ந் தேதி முதல் போராட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் இந்த திட்டம் வராது என்று போராட்ட பந்தலுக்கே வந்து உறுதி அளித்ததால் முதல்கட்ட போராட்டம் 22 நாட்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு,  ஜெம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் ஏப்ரல் 12 ந் தேதி 2 ம் கட்ட போராட்டம் தொடங்கி 174 நாட்கள் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி காவல் நிலையங்களில் 62 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

ஜெம் நிறுவனம் விலகல் கடிதம் :

    இந்த நிலையில் ஒப்பந்தம் கெயெழுத்தாகி ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் நெடுவாசல் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள ஜெம் நிறுவனம் நெடுவாசல் கிராமத்திற்குள் சென்று எந்த பணிகளும் செய்ய முடியாமல் தவித்து வருகிறது. கிராம மக்களின் போராட்டத்தை மீறி எந்த நிறுவனமும் பணியை தொடங்க ஊருக்குள் வரக் கூடாது என்று விவசாயிகள் அறிவித்திருப்பதால் ஜெம் நிறுவனத்தால் நெடுவாசல் வரமுடியவில்லை. 

    இந்த நிலையில் ஜெம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டெல்லியில் கூறும் போது.. நெடுவாசல் திட்டம் செயல்படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட நிலங்களை எங்கள் நிறுவனப் பெயருக்கு மாற்றித்தரக் கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல முறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. ஜெம் நிறுவனம் என்பது லாப நோக்கம் கொண்ட வியாபார நிறுவனம் தான். ஆனால் ஒரு வருடங்களுக்கு மேலாக சம்மந்தப்பட்ட நிலம் மாற்றிக் கொடுக்காததால் பணியை தொடங்க முடியாமல் இழப்பு எற்பட்டுள்ளது. அதனால் நெடுவாசல் திட்டத்திற்கு பதிலாக மாற்று இடம் வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

 

விவசாயிகள் மகிழ்ச்சி :

    இந்த அறிவிப்பு பத்திரிக்கையில் வெளிவந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் கூடிய நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் ஜெம் நிறுவனம் நெடுவாசல் திட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

    மேலும் நெடுவாசல் காக்க போராடிய விவசாயிகள், அரசியல் கட்சிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மாணவர்கள், திரைதுறையினருக்கு நன்றி சொல்வதுடன்., இந்த திட்டத்தை ஒப்பந்தம் செய்த நிறுவனமே வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் மத்திய அரசு முழுமையாக இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த எந்த ஊரிலும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த கூடாது என்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

"பயிர்கள் மழைநீரில் மூழ்கி, முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன" - பிஆர்.பாண்டியன்

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r. pandiyan about damages in delta districts

 

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் பி.ஆர்.பாண்டியன் இன்று  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஆய்வு செய்தபின் பேசும்போது, "தமிழ்நாட்டில் வானிலை மையம் கூட கணிக்க முடியாத வகையில் பருவம் தப்பிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூர் மாவட்டம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை  டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 15 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கி முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு இடுபொருள் செலவாக ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் பல கிராமங்கள் விடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

அரசு உடனடியாக அந்த நடைமுறையைக் கைவிட்டுவிட்டு டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்து உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.  காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல எடப்பாடி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பருவம் தப்பிய மழை பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பேரிடர் பகுதியாக அறிவித்து உரிய நிதியை வழங்க வேண்டும்" என்றார்.

 

 

Next Story

"நெடுவாசலில் போராட்ட நினைவுத் தூண் அமைக்க வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன்...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r.pandiyan reqquest to neduvasal people

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை ஒப்புதல் அளித்த நிலையில் 16 ந் தேதி காலை திட்டத்தைக் கைவிடக் கோரி அங்குள்ள கடைவீதியில் விவசாயிகள் 100 பேர் திரண்டு அடையாள ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதன் பிறகு இது தொடர் போராட்டமாக மாறியது. நாடியம்மன் கோயில் ஆலமரத்திடல் போராட்டக் களமானது. அதுவரை போராட்டம் என்றால் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தான் வழக்கம். ஆனால் நெடுவாசலில் அப்படியே தலைகீழாக மாறி, போராட்டம் என்பது கலைத் திருவிழா போல நடந்தது. 

 

ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் உரைவீச்சு, சினிமா நட்சத்திரங்கள் எனப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. போராட்டக்களத்திற்கு வந்தவர்களை இருகரம் கூப்பி வரவேற்று அவர்களுக்கு உணவளித்து உபசரித்தார்கள் போராட்டக் குழுவினர். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டம் செய்தாலும் இந்த நூற்றாண்டில் நடந்த முக்கியமான அமைதி வழி போராட்டங்களில் ஒன்றாக மாறியது. இந்த போராட்டத்தின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் நெடுவாசல் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இது பற்றி அவர் கூறும் போது, "நெடுவாசல் கிராமத்தில் வரலாறு காணாத போராட்டத்தைச் சுதந்திரத்திற்குப் பிறகு இப்பகுதி விவசாயிகள் காந்திய வழியில் நடத்தி உலகத்தின் பார்வையைத் திருப்பி உள்ளனர். எதிர்காலத்தில் இனி விவசாயிகள் வாழ்க்கையே போராட்டமாக மாறி வருகிறது. எனவே நெடுவாசல் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், எதிர்கால சந்ததியினருக்கு இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நெடுவாசல் கிராமத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் அமைப்பதாக  கிராம மக்கள் கூறியுள்ளனர்" என்றார்.