கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலுள்ள திருகொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் காலை, மாலை நேர வகுப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதில் தேசிய மாணவர் படை (என்.சி.சி) அமைப்பில் உள்ள 90 மாணவர்களையும் கடந்தாண்டு வரை வரலாற்றுதுறைத் தலைவராக இருந்த மதிவாணன் பயிற்றுனராக வழி நடத்தி வந்தார். கடந்த மே மாதத்துடன் அவர் பணிநிறைவு பெற்றதால் தேசிய மாணவர் படைக்கு பொறுப்பாளராக இயற்பியல் பேராசிரியர் வள்ளல்பெருமாள் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவரது பணிச்சுமையின் காரணமாக தேசிய மாணவர் படையை முறையாக இயக்க முடியவில்லை என அதில் இருந்து விடுவித்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மூன்று கவப்பயிற்சி(கேம்ப்) செய்ய வேண்டிய சூழ்நிலையில் 2 கவப்பயிற்சிகளை நடத்தாமல் இருந்து வந்துள்ளார். மேலும் ஒரு கவப்பயிற்சி செய்யவில்லை என்றால் அந்த கல்லூரியில் இருந்து தேசிய மாணவர் படை நீக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லுாரி நிர்வாகம் சார்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் என்.சி.சி அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நேற்றும், இன்றும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்.சி.சிக்கு தகுதி வாய்ந்த இரண்டு பேராசிரியர்கள் பணியில் உள்ளதால் அவர்களில் ஒருவருக்கு பயிற்சி கொடுத்து என்.சி.சி அமைப்பினை தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவலறிந்து வந்த கல்லூரி (பொறுப்பு) முதல்வர் முகுந்தகுமாரி மற்றும் காவல்துறையினர் மாணவர்களிடம் சமரசம் செய்து வருகின்றனர். ஆனாலும் கல்லூரியில் தேசிய மாணவர் படை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வில்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.