Nayinar Nagendran appears in the High Court

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்த தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றார். இத்தகைய சூழலில் தான் அவரது வெற்றிக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட நைனார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (19.06.2025) விசாரணைக்கு வந்தது. இதற்காக நயினார் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது ஆவணங்கள் அனைத்தும் நயினார் நாகேந்திரன் முன்பு சரிபார்க்கப்பட்டன. இதனையடுத்து போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நைனார் நாகேந்திரனுடைய தேர்தல் ஆவணங்களைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி இந்த வழக்கில் குறுக்கு விசாரணை நடைபெற இருப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.