mk

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் அண்மையில் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து, கடந்த 2015- ஆம் ஆண்டு அவர் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தின் போது, நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவருக்கும் வரும் ஜூன் 9- ஆம் தேதி அன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் திருமணமும் நடைபெற இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது திருமண அழைப்பிதழை கொடுத்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்குச் சென்ற இருவரும் முதல்வரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றதோடு, திருமணத்திற்கு வருமாறு அழைப்பும் விடுத்தனர். இந்த சந்திப்பின் பொழுது உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.