
'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இத்தகவலை உறுதி செய்தனர். 6 வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாக நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் இவர்களது திருமணம் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் கும்பகோணத்தில் உள்ள கோவில் ஒன்றில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து பொங்கல் வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சுற்றிலும் கிராமத்து குழந்தைகள் சத்தமிட்டு ஆராவாரம் செய்ய, விக்னேஷ் சிவன் நயன்தாரா சேர்ந்து பொங்கல் வைக்கும் அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)