Advertisment

பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே நடிகர் ரஜினி தான்- நயன்தாரா பெருமிதம்...

கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Advertisment

nayanthara about rajinikanth

சின்ன பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை வெற்றி பெற வைக்ககூடிய ஒரே நடிகையாக நயன்தாரா உள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 70 படங்களில் நடித்துள்ள நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்த “லவ் ஆக்ஷன் டிராமா” படம் கேரளாவில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டியிருக்கிறது.

சமீபத்தில் அந்த படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்த நயன்தாரா பத்திரிக்கையாளர்களுடன் பேசினார். அப்போது ரஜினிகாந்த் குறித்து கேட்ட ஒரு கேள்விக்கு, "சினிமா துறையில் நன்மையும் எளிமையும் உள்ள ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான். பெண்களை காணும் போது எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் செய்வதுடன், பவ்யமாக பேசுபவர் ரஜினி. அவர் சூப்பர் ஸ்டார் என்ற எந்த பந்தாவும் காட்டிகொள்ள மாட்டார் என கூறினார் நயன்தாரா.

darbar rajinikanth Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe