Skip to main content

பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே நடிகர் ரஜினி தான்- நயன்தாரா பெருமிதம்...

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

 

nayanthara about rajinikanth

 

 

சின்ன பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை வெற்றி பெற வைக்ககூடிய ஒரே நடிகையாக நயன்தாரா உள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 70 படங்களில் நடித்துள்ள நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்த “லவ் ஆக்ஷன் டிராமா” படம் கேரளாவில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டியிருக்கிறது.

சமீபத்தில் அந்த படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்த நயன்தாரா பத்திரிக்கையாளர்களுடன் பேசினார். அப்போது ரஜினிகாந்த் குறித்து கேட்ட ஒரு கேள்விக்கு, "சினிமா துறையில் நன்மையும் எளிமையும் உள்ள ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான். பெண்களை காணும் போது எழுந்து  நின்று கைகூப்பி வணக்கம் செய்வதுடன், பவ்யமாக பேசுபவர் ரஜினி. அவர் சூப்பர் ஸ்டார் என்ற எந்த பந்தாவும் காட்டிகொள்ள மாட்டார் என கூறினார் நயன்தாரா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.