Advertisment

’’காட்டுமிராண்டிகளுக்கு இந்த என்கவுன்டர் பயத்தை தரும்’’-நயன்தாரா

n

Advertisment

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேரை என்கவுன்டரில் கொல்லப்பட்டதற்கு நடிகை நயன்தாரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தெலுங்கானாவில்காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர். தெலுங்கானாகாவல்துறையின் செயல் நியாயமான நடவடிக்கை என்று அழுத்திச் சொல்வேன். பெண்களை வன்புணர்வு செய்யும் காட்டுமிரண்டிகளுக்கு இந்த என்கவுன்டர் பயத்தை தரும்’’என்று தெரிவித்துள்ளார்.

நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையாகியிருக்கிறது உண்மையான நாயகர்களால். தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் சட்டத்துக்கு புறம்பாக பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்.

Advertisment

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்நடவடிக்கை சற்றேனும் பயன் தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும் , அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மிதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்’’

Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe