Nayakaneri is the Panchayat Council President of the Mysteries List

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த பாண்டியன். இவர் மனைவி இந்துமதி. இவர் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட்டார். மாற்றுச் சமூகத்தினர் அதிகம் வசித்து வருவதாகச் சொல்லப்படும் இந்த ஊராட்சி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பாண்டியன் தனது மனைவி இந்துமதியை நிற்கவைத்தார். ஆனால் சிலர் இந்துமதி தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்துமதியை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து நாயக்கனேரி பஞ்சாயத்தில் சேர்ந்த சிலர் இந்துமதி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு, அவர்களுடன் யார் சேர்ந்து செயல்படுகிறார்களோஅவர்கள் அனைவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனிடையே நாயக்கனேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் மற்றும் சிவராஜ் இருவரும் இந்துமதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்துமதியால் ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி ஏற்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்துமதி - பாண்டியன் மற்றும் அவரது ஆண் குழந்தைகளுடன் மழை கிராமத்திலிருந்து வெளியேறி ஆம்பூர் பகுதியில் வீடு எடுத்துத் தங்கி வேலைக்குச் சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இந்துமதி கடைக்குச் சென்று விட்டு வருவதாக வீட்டை வீட்டு வெளியேறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வரதத்தால் பாண்டியன் மனைவியை அங்கும் இங்கும் தேடி பார்த்துள்ளார். பின்னர் நேற்று காலை மனைவியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்த பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் மற்றும் சிவராஜ் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாகவிசாரணை நடத்தி வந்த நிலையில், பாண்டியன் தன்னை தேடி வருவதை அறிந்து ஆம்பூர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்துள்ளார், மேலும், “நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி குறித்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். அதனால் எனது கணவருடனும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால் மனஉளைச்சலின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினேன்” என்று தெரிவித்தார். தன்னுடைய கணவர் பாண்டியன் என்னை காணவில்லைஎன்று தேடிக் கொண்டிருக்கும் தகவலை அறிந்து தற்போது மீண்டும் வந்துள்ளேன் என்றார்.