publive-image

Advertisment

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (31/07/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் விழாவில், தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் கொடியை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதுவரை 10 மாநில காவல்துறைகள் மட்டுமே இந்த கவுரவ கொடியைப் பெற்றுள்ளன.

குடியரசுத் தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின் கொடி முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் பெற்றுக் கொண்டது. தமிழகத்தில் காவலர் முதல் டி.ஜி.பி. வரையிலான காவல்துறையினர் கொடியை இனி தங்கள் சீருடையில் அணியவுள்ளனர்.

அனைத்து காவலர்களுக்கும் பொருத்தும் வகையிலான புதிய இலச்சினையை முதலமைச்சரிடம் குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவருக்கு நினைவுப் பரிசாக சதுரங்க அட்டையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

publive-image

விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "தமிழக காவல்துறை இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக விளங்குகிறது. அதிகளவில் நடைபெறும் சைபர் குற்றங்களை காவல்துறையினர், அறிவியல் பூர்வமாகத் தடுக்க வேண்டும். சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு என்று தனியாக ஒன்று செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

கடத்தப்பட்ட கடவுள் சிலைகளை மீட்பதில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாகச் செயல்படுகிறது. இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்; ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

விழாவையொட்டி, ராஜரத்தினம் மைதானத்தைச் சுற்றி 200- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.