Nattatheeswarar temple flooded

Advertisment

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு அடுத்த காங்கேயம் பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவே உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவில் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி ஈரோடு மாவட்டம் சாவடிப்பாளையம் அடுத்துள்ள காங்கேயம் பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவே உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு வெள்ள நீர் அதிகரிப்பின் காரணமாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.