Skip to main content

“உலக நாடுகள் ஸ்பேஸ் எக்ஸை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு ஓடி வருவார்கள்” - ராக்கெட் ஏவுதளம் குறித்து கனிமொழியுடன் மயில்சாமி ஆலோசனை!

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

"The nations of the world will leave Space X and flee to Tamil Nadu" - Myilsamy advice with Kanimozhi about the rocket launch site!

 

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரையும், திமுக எம்.பி. கனிமொழியும் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்கள். அந்த சந்திப்பில் தூத்துக்குடியிலுள்ள குலசேகரப்பட்டினத்தின் ராக்கெட் ஏவுதளம் குறித்த விஷயங்கள் முக்கியமாக இடம்பெற்றது. அது குறித்து கனிமொழியிடம் விவாதித்த மயில்சாமி, "டெஸ்லா நிறுவனத்தின் முதலாளி ஹெலன் மாஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் 42,000 சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவ திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அதை விட அதிகமாகவும் விரைவாகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டணத்தில் செயற்கைக் கோள்களை உருவாக்க முடியும். ராக்கெட் ஏவு தளத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் பரப்பளவில் ஏவுதளம் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை அமைக்கும் இட வசதி குலசேகரப்பட்டணத்தில்தான் இருக்கிறது.

 

இன்றைக்கு இந்தியாவில் செயற்கோள்களை தயாரித்து விண்ணில் செலுத்துவதற்கு நிறைய மாதங்கள் தேவைப்படுகிறது. காரணம், ராக்கெட்டுகளுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிப்பது, அதனை அசெம்ளிங் செய்வது, அதனை டெஸ்டிங் பண்ணுவது, பிறகு லான்ஞ் பண்ணுவது ஆகியவை ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கிறது. அதனால், ஒவ்வொரு இடமாக கொண்டு செல்ல வேண்டியது இருப்பதால் தான் நாட்கள் அதிகம் தேவைப்படுகின்றன. 

 

குலசேகரப்பட்டிணத்தில் ஏவுகணைகளை தயாரிக்கலாம்; அதை மகேந்திரகிரியில் அசெம்ளிங் பண்ணலாம்; அங்கேயே டெஸ்டிங் செய்யலாம்; மீண்டும்  குலசேகரப்பட்டிணத்திற்கு கொண்டு வந்து லான்ஞ் பண்ணலாம். மிக எளிதாக முடிந்து விடும். நாட்களின் தேவை அதிகமாகாது. காரணம், அனைத்துப் பணிகளும்  அதிகபட்சம் 40 கி.மீ. சுற்றளவிலேயே செய்துவிட முடியும். அந்தளவுக்கு இங்கு இடமும் வசதியும் அதிகம் இருப்பது தான். இதனை தமிழக அரசு முறையாக பயன்படுத்தினால் ஹெலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாடிச் செல்வதை விட, உலக நாடுகள் தமிழகத்தின் குலசேகரப் பட்டிணத்தை தேடி ஓடி வருவார்கள். இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்" என்று விவரித்துள்ளார் மயில்சாமி. இதிலுள்ள பல விசயங்களை கேட்டறிந்து கொண்டதுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறியிருக்கிறார் கனிமொழி.

 

 

சார்ந்த செய்திகள்